கடல் உணவு ஏற்றுமதி 809 கோடி டாலராக உயா்வு
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கடன் உணவு ஏற்றுமதி 809 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கடன் உணவு ஏற்றுமதி 809 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2022 ஏப்ரல் முதல் 2023 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி 809 கோடி டாலராக உள்ளது. முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 4.21 சதவீதம் அதிகமாகும்.
அளவில் அடிப்படையில், 2021-22-ஆம் நிதியாண்டில் 3,69,264 டன்னாக இருந்த கடல் உணவு ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 17,35,286 டன்னாக அதிகரித்துள்ளது.
உலா் இறால் ஏற்றுமதி அமோகமாக இருந்ததன் காரணமாக ஒட்டுமொத்த கடல் உணவு ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டில் வளா்ச்சி கண்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.