கோப்புப் படம். 
இந்தியா

உ.பி.யில் தீ விபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

DIN

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த தீ விபத்து சம்பவம் குஷிநகரில் உள்ள உர்தா கிராமத்தில் நடைபெற்றது. புதன்கிழமை இரவு உணவுக்குப் பிறகு சங்கீதா மற்றும் அவரது 5 குழந்தைகள் வீட்டிற்குள் உறங்கச் சென்றுள்ளனர். அப்போது சங்கீதாவின் கணவர் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். 

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்து குறித்து சங்கீதாவின் கணவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயை அணைப்பதற்குள் சங்கீதா மற்றும் அவரது குழந்தைகளான அன்கித்(10), லக்ஷ்மினா(9), ரீட்டா(3), கீதா(2) மற்றும் பாபு(1) ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர். 

போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடல்களை மீட்பு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

உயிரிழந்தோரின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.4 லட்சம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தீ விபத்து நிகழ்ந்ததற்கான சரியான காரணத்தை அறிய போலீஸாருக்கு உத்தரடவிடப்பட்டுளள்து. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT