இந்தியா

வலுவற்ற வெளியுறவுக் கொள்கைகளால் எல்லைப் பகுதிகளை காங்கிரஸ் மேம்படுத்தவில்லை: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தங்களது வலுவற்ற வெளியுறவுக் கொள்கைகளால் நாட்டின் எல்லைப் பகுதிகளில் சாலைகளை உருவாக்க விரும்பாததாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

காங்கிரஸ் தங்களது வலுவற்ற வெளியுறவுக் கொள்கைகளால் நாட்டின் எல்லைப் பகுதிகளில் சாலைகளை உருவாக்க விரும்பாததாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தங்களது இத்தனை ஆண்டுகால நீண்ட ஆட்சியில் நாட்டின் எல்லைப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அண்டை நாடுகள் வருத்தமடைவதை விரும்பவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். அருணாசலப் பிரதேசத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் தங்களது பாதுகாப்புக்காக எல்லைப் பகுதியில் கட்டமைப்பு மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்தவில்லை. அப்படி செய்தால் அது அவர்களது அரசுக்கு தொந்தரவை உருவாக்கக் கூடும் என நினைத்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு லடாக் விவகாரத்தில் உறுதியாக செயல்பட்டு சீனாவுக்கு சரியான பதிலை அளித்தது. அவரது அரசின் வலுவான வெளியுறவுக் கொள்கைகளால் ஒட்டுமொத்த உலகமும் அவரை சக்தி வாய்ந்த தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்து 9  ஆண்டுகள் நிறைவடைந்ததையும், அருணாசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைத்து 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் கொண்டாடும் விதமாக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT