கோப்புப் படம் 
இந்தியா

மும்பையில் ரூ.25 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்!

மும்பை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு இந்த ஆண்டு இதுவரை ரூ.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள 777 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளது மற்றும் இது தொடர்பாக 97 பேரை கைது செய்துள்ளது.

DIN

மும்பை: மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இந்த ஆண்டு இதுவரை ரூ.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள 777 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளது. 

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இந்த ஆண்டு இதுவரை ரூ.25.40 கோடிக்கு மேல் மதிப்புள்ள 777 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக 97 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் முக்கிய குற்றவாளிகள் என்றும், அவர்களிடமிருந்து ரூ.19.11 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் அனைத்தும் பாந்த்ரா, மாஹிம், பி.கே.சி மற்றும் பைகுல்லா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை.

இந்த வழக்குகளின் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குஜராத், பிகார், ஹைதராபாத், கர்நாடகா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த போதைப் பொருள் சப்ளையர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் ஆப்பிரிக்கர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT