இந்தியா

கோவின் தகவல்கள் கசிவு: பிகாரில் ஒருவர் கைது!

கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் கசியவிட்டது தொடர்பாக பிகாரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

DIN

கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் கசியவிட்டது தொடர்பாக பிகாரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவில் கடந்த 2021 ஜனவரி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதை பதிவி செய்வதற்காக கோவின் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. 

தடுப்பூசிக்கான முன்பதிவு, தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட தகவல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் விவரம் இதில் பதிவு செய்யப்படும். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபருக்கு சான்றிதழும் பெறப்படும் வசதி செய்யப்பட்டது. 

கோவின் இணையதள தகவல்கள் கசிந்து வருவதாக வந்த தகவலையடுத்து, கசிவு விவகாரம் தொடர்பாக நோடல் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி மதிப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், பிகாரைச் சேர்ந்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தகவல்களை கசியவைக்க அந்த நபர் டெலிகிராம் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்திய தில்லி போலீஸார் சிறப்புப் படை அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT