இந்தியா

ஜம்மு-காஷ்மீர் பாஜகவின் ஆய்வுக்கூடமாக இருந்தது: மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு ஆய்வுக் கூடமாக பயன்படுத்துவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

DIN

ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு ஆய்வுக் கூடமாக பயன்படுத்துவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

முதலில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. பின்னர், அந்த ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் நேற்று (ஜூன் 23) கலந்து கொண்ட நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஜம்மு-காஷ்மீர் போல் மாற்றி விடும். உண்மையில் இது இந்தியாவின் மீதான அடி. முதலில் ஜம்மு-காஷ்மீருக்கு சட்டவிதி 370-ன் கீழ் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கினர். பின்னர், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மூன்று பேர் உள்பட பல தலைவர்களை சிறையிலடைத்தனர். ஜம்மு-காஷ்மீர் அவர்களுக்கு ஒரு ஆய்வுக்கூடமாக இருந்தது. தில்லி இன்று சந்திக்கும் மத்திய அவசரச் சட்டம் போன்ற பிரச்னைகள் ஜம்மு-காஷ்மீரில் முன்னதாகவே தொடங்கிவிட்டது. வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு நசுக்கப்படும். ஒட்டு மொத்த இந்தியாவின் நிலையும் தற்போது உள்ள காஷ்மீரின் நிலைக்கு மாறிவிடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT