இந்தியா

பிகார் மக்களை முட்டாள்களாக நினைக்காதீர்கள்: தேஜஸ்வி

DIN

பிகாரின், பூர்னியாவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் பங்கேற்ற பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பாஜகவைத் தாக்கி பேசியுள்ளார். 

கடந்த 2014 நடத்தப்பட்ட பேரணியில் பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், இன்று வரை அவர் நிறைவேற்றவில்லை. பிகார் மக்களை முட்டாள்களாக நினைக்க வேண்டும். நாங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டோம். 

2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் மற்றும் அனைத்து இந்தியக் குடிமகன்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார். இன்றுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் இதுவரை மத்திய அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகளில் ஒன்றையாவது சொல்லுங்கள் என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், பாஜகவில்  தலைவர்கள் யாருமில்லை அனைவருமே வியாபாரிகள் தான். அவர்கள் மக்களை சாதி மத அடிப்படையில் பிரிக்க முயல்கிறார்கள். லாலு பிரசாத்தின் மகனாகிய நான் எந்த வகுப்புவாதத்திற்கும் ஒத்துப்போகவும் மாட்டேன் வளைந்து கொடுக்கவும்  மாட்டேன்  என்றார்.

இந்த பேரணியில்  எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT