மணீஷ் சிசோடியா கைதுக்குப் பிறகு ஆம் ஆத்மி இப்படி செய்யலாமா? பாஜக குற்றச்சாட்டு!
தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஐ லவ் மணீஷ் சிசோடியா என்ற பெயரில் மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவு திரட்டும் விதமாக புதிய பலகை ஒன்றை ஆம் ஆத்மி அமைக்க உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஐ லவ் மணீஷ் சிசோடியா என்ற பெயரில் மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவு திரட்டும் விதமாக புதிய பலகை ஒன்றை ஆம் ஆத்மி அமைக்க உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டினை ஆம் ஆத்மி மறுத்துள்ளது.
மணீஷ் சிசோடியா தில்லி அரசின் கல்வித் துறை உட்பட 18 துறைகளின் பொறுப்புகளை கவனித்து வந்தார். அவர் அண்மையில், தில்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், பாஜக சார்பில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
இது குறித்து தில்லியின் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் பேசியதாவது: மணீஷ் சிசோடியாவின் கைதுக்குப் பிறகும் கல்வி என்ற பெயரில் ஆம் ஆத்மி குப்பை அரசியலை செய்து வருகிறது. அவர்களது மோசமான அரசியலை தற்போது பள்ளிக் குழந்தைகள் வரை கொண்டு வந்துவிட்டனர் என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி தரப்பில் கூறியதாவது: பாஜக குற்றம் சுமத்துவது போன்று எந்த ஒரு செயலிலும் ஆம் ஆத்மி ஈடுபடவில்லை. அரசின் எந்த ஒரு துறையும் எந்த ஒரு அதிகாரிகளும் பாஜக கூறுவது போல எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை. இது ஆம் ஆத்மியின் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற பாஜகவின் திட்டம் என்றனர்.
இதற்கிடையில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் பலரும் மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவாக குழந்தைகள் எழுதியுள்ள கடிதங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.