முகப்பு
இந்தியா

வாய்ப்பு கொடுங்கள்..ஊழலற்ற ஆட்சிக்கு ஆம் ஆத்மி பொறுப்பு: கேஜரிவால்

ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள், ஊழல் இல்லாத அரசாங்கம் அமைய நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கர்நாடக மக்களிடம் உறுதி அளித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
பகிர்:

ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள், ஊழல் இல்லாத அரசாங்கம் அமைய நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கர்நாடக மக்களிடம் உறுதி அளித்துள்ளார். 

கர்நாடகத்தில் இந்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே கர்நாடகத்துக்கு வருகை புரிந்த கேஜரிவால் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். 

அப்போது அவர் பேசியதாவது, 

கர்நாடக மக்கள் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்வோம். 

பஞ்சாபில் கைது செய்யப்பட்ட அமைச்சரும், எம்எல்ஏவும் சிறையில் அடைக்கப்பட்டதால் ஊழலைப் பொறுத்துக் கொள்ள முடியாது. 

கர்நாடகத்தை ஆளும் பாஜக மாநிலத்தில் 40 சதவீத கமிஷன் ஆட்சி நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டினார். 

ஆம் ஆத்மி ஆட்சியமைத்தால் மாநில மக்களுக்கு இலவச மின்சாரம், அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் நல்ல மருத்துவம் வழங்குவதாக உறுதியளித்தார்.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடகாவுக்கு வந்து, மாநிலத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைக்க வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை வழங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில், தற்போது கேஜரிவால் இதேபோன்று வாக்குறுதியை அள்ளி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →