உத்தரகாசியில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்!
உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் இன்று (மார்ச் 5) உணரப்பட்டதாக மாவட்டப் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் இன்று (மார்ச் 5) உணரப்பட்டதாக மாவட்டப் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தொடர்பாக மாவட்டப் பேரிடர் மேலாண்மை அதிகாரி தேவேந்திர பட்வால் கூறியதாவது: முதல் நிலநடுக்கத்தின் மையப்பகுதி உத்தரகாசி மாவட்டத்தின் சிரோர் வனப்பகுதியில் நள்ளிரவு 12.45 மணிக்கு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த பலரும் தங்களது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டனர். வீடுகளின் சமையலறை மற்றும் பலகைகளில் உள்ள பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் கீழே விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தில் அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார்கள்.
இதையும் படிக்க: இந்தியா ஜனநாயகத்திலிந்து மாறி வருகிறது: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்!
கதவுகள் மற்றும் சன்னல்கள் வேகமாக அடிக்க ஆரம்பிக்க வீட்டினுள் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியே வந்துள்ளார்கள். நிலநடுக்கத்தின் அச்சத்தினால் அவர்கள் நள்ளிரவு முதல் தூக்கத்தை இழந்து வீதிகளில் நின்றுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எந்த ஒரு பொருட்சேதமும் ஏற்படவில்லை என்றார்.
முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டு லேசான அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.