கோப்பிலிருந்து.. 
இந்தியா

மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பந்தல் சரிந்தது

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் பங்கேற்ற நிகழ்ச்சியில் போடப்பட்டிருந்த பந்தலின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

DIN


தாணே: மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் பங்கேற்ற நிகழ்ச்சியில் போடப்பட்டிருந்த பந்தலின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

ஷாஹ்பூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பந்தல் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சில பெண்களுக்கு காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பங்கேற்ற விழாவில், மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பலத்த காற்று வீசியதால், பந்தல் சரிந்து விழுந்தது.

கண்ணில் பலத்த காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாதுகாப்புக் கருதி அங்கு அமைக்கப்பட்டிருந்த விற்பனைக் கூடங்கள் மூடப்பட்டு, சற்று நேரம் பதற்றம் நிலவியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 50-ல் சென்னையை சுற்றிப் பார்க்க... ‘சென்னை உலா’ பேருந்து சேவை! இன்றுமுதல்!!

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

SCROLL FOR NEXT