தெலங்கானா முதல்வரின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மேலவை உறுப்பினருமான கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் மேலவை உறுப்பினருமான கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தில்லி மதுபான முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான அமித் அரோராவிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் கவிதாவின் பெயர் இடம்பெற்றிருந்தது.
இதுதொடர்பாக வியாழக்கிழமை(மார்ச் 9) நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க கோரி கவிதாவுக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | சென்னை விமான நிலையத்தில் உடைமைகளை அடையாளம் காணும் வசதி அறிமுகம்!
ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக கவிதாவிடம் கடந்தாண்டு சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.