இந்தியா

தில்லியில் தெலங்கானா முதல்வரின் மகள் உண்ணாவிரதம்!

பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

DIN

பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி தில்லி ஜந்தர் மந்தரில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த போராட்டத்தில் பேசிய கவிதா,“பெண்கள் இடஒதுக்கீடு மசோதா முக்கியத்துவம் வாய்ந்தது. அதை உடனடியாக கொண்டுவர வேண்டும். மசோதா நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் நிறுத்தப்படாது என்று அனைத்து பெண்களுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த மசோதா தேசத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நாடாளுமன்றத்தில் உடனடியாக இந்த மசோதாவை அறிமுகப்படுத்த பாஜக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று ஆதரவளித்து வருகின்றனர்.

தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நாளை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவுள்ள நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை கவிதா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு!

ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் நின்றபடி விடியோ எடுத்த சிறார்கள் வந்தே பாரத் ரயில் மோதி பலி!

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு

SCROLL FOR NEXT