காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கர்நாடகத்தை ஏடிஎம்களாக பயன்படுத்தின: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்
காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கர்நாடகத்தை ஏடிஎம்களாக பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கர்நாடகத்தை ஏடிஎம்களாக பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெற்ற பாஜகவின் கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் அந்த மாநிலத்தை ஏடிஎம்-ஆக பயன்படுத்தினர்.
இதையும் படிக்க- இரட்டை சதத்தை தவறவிட்ட கோலி: டிராவை நோக்கி நகரும் கடைசி டெஸ்ட்?
பணம் இங்கிருந்து சென்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான அரசின் கீழ், மாநிலம் ஒரு குடும்பத்திற்கான ஏடிஎம்-ஆக மாறிவிட்டது. மோடி கர்நாடகத்திற்கு பணம் அனுப்பினார். காங்கிரஸ் ஆட்சியில், கர்நாடகத்தில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ. 6,000 கோடி செலவிடப்பட்டது.
ஆனால் மோடியின் தலைமையில், ஐந்து ஆண்டுகளில் ரூ. 50,000 கோடி செலவிடப்பட்டது. ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவமதிக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.