முகப்பு
இந்தியா

உ.பி.யில் தொடரும் பள்ளி மாணவிகளின் தற்கொலை!

உத்தரப் பிரதேசத்தின் லக்னெளவில் 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 16 மார்ச், 2023 at 12:16 PM
கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் லக்னெளவில் 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லக்னௌவில் தனியார்ப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்த மாணவி அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிணமாகத் தொங்கி நிலையில் போலீசார் சடலத்தைக் கைப்பற்றினர். 

உயிரிழந்த பள்ளி மாணவியின் தந்தை, தனது மகள் பள்ளி ஆசிரியரால் துன்புறுத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இதுதொடர்பாக பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

முன்னதாக மார்ச் 4ஆம் தேதி பரேலி மாவட்டத்தில் தேர்வெழுத அனுமதிக்க மறுத்ததால் 14 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.