கோப்புப்படம் 
இந்தியா

மணிப்பூர் வன்முறை: கர்நாடக தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார் அமித் ஷா

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

மணிப்பூர் வன்முறையை அடக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகளிடமும், மாநில அமைச்சர்களிடமும் ஆலோசனை நடத்தி வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா, அந்த மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தி வருகிறார்.

கர்நாடகத்தில் இன்று பல்வேறு இடங்களில் நடைபெறவிருந்த தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்ட அமித் ஷா, வடகிழக்கு மாநில முதல்வர்களை காணொலி காட்சி வாயிலாக சந்தித்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு நேரடியாக அறிவுறுத்தியிருக்கிறார்.

நேற்று இரவு மணிப்பூர் முதல்வர் என். பைரன் சிங் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் கலந்தாலோசனை நடத்தி எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT