இந்தியா

தி கேரளா ஸ்டோரி: பிரதமர் மோடி கருத்து

சர்ச்சையை  கிளம்பியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். 

DIN

சர்ச்சையை  கிளம்பியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். 

கர்நாடக தேர்தலையொட்டி பெல்லாரியில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, '‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது. தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை இந்த படம் பேசுகிறது.இது பயங்கரவாதத்தின் கேவலமான உண்மையைக் காட்டுகிறது. பயங்கவாதிகளின் நடவடிக்கையை அம்பலப்படுத்துகிறது. 

தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதத்தை ஆதரிக்கிறது. வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் இந்த தீவிரவாதத்தை ஆதரிக்கிறது. அப்படிப்பட்ட கட்சியால் கர்நாடகத்தை எப்படி காப்பாற்ற முடியும்? பயங்கரவாத சூழல் இருந்தால் தொழில், ஐடி, விவசாயம் மற்றும் புகழ்பெற்ற கலாசாரம் என அனைத்தும் அழிந்துவிடும்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT