நாட்டில் புதிதாக 2,961 பேருக்கு கரோனா!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,961 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை சனிக்கிழமை அறிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,961 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை சனிக்கிழமை அறிவித்துள்ளது.
முந்தைய நாளைவிட பாதிப்பு சற்று குறைந்துள்ளதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 30,041-ஆக குறைந்துள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 17 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால், இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,659-ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.