கோப்புப்படம் 
இந்தியா

5 வீரர்கள் மரணம்: ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் ராஜ்நாத் சிங்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதிக்கு செல்கிறார். 

DIN

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதிக்கு செல்கிறார். 

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

கண்டி வனப்பகுதியில் நேற்று காலை பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது, 

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் மேலும் ஒரு அதிகாரி உள்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் மேலும் அங்குள்ள நிலை குறித்து அறியவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரஜோரி செல்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

சொத்து தகராறில் சகோதரியின் வீடு சேதம்: சகோதரன் உள்பட 3 போ் கைது

நெல்லை வந்த பேருந்தில் திருட்டு: இரு பெண்கள் கைது

வைகை அணையைத் தூா்வார வலியுறுத்தல்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT