இந்தியா

ம.பி. பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

மத்திய பிரதேச பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

DIN

மத்திய பிரதேச பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் தசங்கா பகுதி அருகே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முதலில் 15 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 20 முதல் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கார்கோனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்தூர் ஐ.ஜி. ராகேஷ் குப்தா தெரிவித்துள்ளார். 

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய அவர், தற்போது சிகிச்சையில் இருக்கும் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். 

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000, படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25,000 நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி உள்பட 22 இடங்களில் என்ஐஏ சோதனை

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி கொலை! ராணுவ வீரர் காயம்!

சளி, இருமல், காய்ச்சல்! குணமாவதில் நீடிக்கும் தாமதம்!

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT