முகப்பு
இந்தியா

கோவாவில் நாளை ஊதியத்துடன் விடுமுறை!

கர்நாடக மாநிலத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி கோவாவில் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
பிரமோத் சாவந்த்
பகிர்:

கர்நாடக மாநிலத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி கோவாவில் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் மே 10(நாளை) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்களிக்கச் செல்ல ஏதுவாக தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

கோவா முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

இதுகுறித்து கோவா மாநில தொழில் சங்கத்தின் தலைவர் தாமோதர் கோச்சர் கூறுகையில், 

ஒவ்வொரு தேர்தலுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக மாறிவிட்டால் அது கோவாவின் தொழில்களை மிகவும் பாதிக்கும். இது முட்டாள்தனமான முடிவு, தேர்தல் ஆதாயங்களுக்காக தொழில்கள் பாதிப்பது நல்லதல்ல.

மாநில அரசின் இத்தகைய ஒருதலைபட்ச முடிவுகளுக்கு எதிராக சட்டப்பூர்வ தீர்வுகளைப் பரிசீலித்து வருவதாக அவர் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →