இந்தியா

மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிப்பு!

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்ததில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சிசோடியா கைது செய்யப்பட்டார். 

பின்னர் சிசோடியாவை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் விசாரணை நடைபெற்றது. இதனிடையே அமலாக்கத்துறையும் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. 

சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரது சிபிஐ காவலை ஜூன் 2 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிசோடியாவின் அமலாக்கத்துறை காவலும் மே 23 நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT