இந்தியா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறார் பசவராஜ் பொம்மை!

கர்நாடக முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை இன்று ராஜிநாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கர்நாடக முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை இன்று ராஜிநாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 36 மையங்களில் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 137, பாஜக-63, மஜத -20, பிற கட்சிகள்- 4 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கிறது. 
அதேசமயம், கர்நாடகத்தின் அடுத்த முதல்வரை காங்கிரஸின் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்யவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 
இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை இன்று ராஜிநாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக ஆலோசனைக் கூடடத்திற்கு பிறகு ராஜிநாமா கடிதத்தை அவர், ஆளுநரிடம் வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT