இந்தியா

கர்நாடகத் தேர்தல்: காங்கிரஸ் 120 தொகுதிகளில் முன்னிலை

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 120 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. 

DIN

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 120 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. 

கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலத்தில் மொத்தம் 36 மையங்களில் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காலை 11.15 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 120, பாஜக-72, மஜத -25, பிற கட்சிகள்- 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. 

பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேலாகவே காங்கிரஸ் நீண்ட நேரமாக முன்னிலையில் இருந்து வருகிறது. இதே நிலை தொடரும்பட்சத்தில் மஜத கட்சியின் ஆதரவின்றி கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும். 

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேல்பூரி

11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

வண்ணமலர்கள் ஆறு!

கோலிவுட் ஸ்டூடியோ!

SCROLL FOR NEXT