இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,223 பேருக்கு கரோனா தொற்று!

DIN

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,498 ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,223 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,49,76,599 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை 5,31,767 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2,720 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை மொத்தம் 4,44,31,137 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.78 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று விகிதம் 0.86 சதவீதமாகவும், வாராந்திர தொற்று விகிதம் 1.30 சதவீதமாகவும் உள்ளது.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,498 ஆக குறைந்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66,89,993 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 1,636 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,42,695 பேரிடம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை 92.84 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT