ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 801 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 801 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 801 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,49,81,475 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தொற்று பாதித்து ஒரே நாளில் 8 பேர் பலியான நிலையில் இறப்பு எண்ணிக்கை 5,31,778 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,815 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை மொத்தம் 4,44,35,204 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.78 சதவீதமாக உள்ளது.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 14,493 ஆகக் குறைந்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66,89,993 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.