முகப்பு
இந்தியா

பத்து நாள்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல்

பத்து நாள்கள் பயணமாக மே 31ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
பத்து நாள்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல்
பகிர்:


புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பத்து நாள்கள் பயணமாக மே 31ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி, ஜூன் 4ஆம் தேதி நியூ யார்க்கின் மாடிசன் சதுக்க தோட்டத்தில், சுமார் 5,000 வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் பேரணியை நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தவிர, ராகுல், வாஷிங்டன், கலிஃபோர்னியா உள்ளிட்ட நகரங்களுக்கும் சென்று, ஸ்டேன்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் உரையாற்றவிருக்கிறார்.

அமெரிக்க பயணத்தின்போது அவர் அந்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்துப்பேசவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.