ராகுல் காந்தி 
இந்தியா

ம.பி. பேரவைத் தேர்தலில் 150 இடங்களைக் கைப்பற்றுவோம்: ராகுல் காந்தி

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

DIN

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. 

இதேபோன்று நடப்பு ஆண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

கர்நாடகத் தேர்தலைப் போன்று மத்திய பிரதேச தேர்தலிலும் 150 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைப்போம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

'நாங்கள் நீண்ட விவாதம் செய்தோம். கர்நாடகத்தில் எங்களுக்கு 135 கிடைக்கும் என்று மதிப்பீடு செய்தோம். அதேபோல மத்திய பிரதேசத்தில் நாங்கள் 150 இடங்களைப் கைப்பற்றுவோம். கர்நாடகத்தில் நாங்கள் என்ன செய்தோமோ, அதையே மத்தியப் பிரதேசத்திலும் செய்யப் போகிறோம்' என்று ராகுல் காந்தி கூறினார். 

முன்னதாக மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், காங்கிரஸ் பொறுப்பாளர் பி. அகர்வால் உள்ளிட்டோருடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT