இந்தியா

காங்கிரஸில் இணையும் நடிகை விஜயசாந்தி?

DIN

தெலங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் நடிகை விஜயசாந்தி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, கடந்த 1998-ஆம் ஆண்டு முதல்முறையாக பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாஜக மகளிர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறிய விஜயசாந்தி, 2020-ஆம் ஆண்டு மீண்டும் தாய் கட்சியான பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில், தெலங்கானாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விஜயசாந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், அவர் பாஜகவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பாரதிய ராஷ்டிர சமிதியிடம் இருந்து தெலங்கானா மக்களை காங்கிரஸ்தான் காப்பாற்ற வேண்டுமென்று எக்ஸ் பக்கத்தில் விஜயசாந்தி பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம், பாஜகவில் இருந்து விலகும் விஜயசாந்தி காங்கிரஸில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT