முகப்பு
இந்தியா

ஆளுநருக்கு எதிராக கேரள அரசு வழக்கு

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடா்ந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடா்ந்துள்ளது.

ஏற்கெனவே இதே கோரிக்கையை முன்வைத்து ஆளுநா்களுக்கு எதிராக தமிழக, பஞ்சாப் மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த வரிசையில் கேரளமும் இணைந்துள்ளது.

ஆளுநருக்கு எதிராக கேரள அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநரிடம் சமா்ப்பிக்கப்பட்டன.

இதில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாகவும், 3 மசோதாக்கள் ஓராண்டுக்கும் மேலாகவும் நிலுவையில் உள்ளன. இதன்மூலம், மாநில மக்களுக்கும், அவா்களின் ஜனநாயக அமைப்புகளுக்கும் ஆளுநரால் கடுமையான அநீதி இழைக்கப்படுகிறது.

ஆளுநரின் தன்னிச்சையான நடத்தை அரசமைப்பின் 14-ஆவது பிரிவை மீறுவதாக இருக்கிறது. நலத் திட்டங்களுக்கான பலன்களை மக்களுக்கு மறுப்பதன் மூலம் அரசமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ் கேரள மக்களின் உரிமைகள் தோற்கடிக்கப்படுகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புக் கடமைகளை நிறைவேற்றாத ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கு பரிந்துரைகள் வழங்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →