முகப்பு
இந்தியா

தலித் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று உடலை துண்டுகளாக்கிய சம்பவம்: காட்டிக்கொடுத்த மகள்

உத்தரப்பிரதேச மாநிலம் பாந்தாவில், 40 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கொன்று, உடலை மூன்று துண்டுகளாக வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 3 நவம்பர், 2023 at 5:59 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:46 AM

பாந்தா: உத்தரப்பிரதேச மாநிலம் பாந்தாவில், 40 வயது பட்டியலினப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கொன்று, உடலை மூன்று துண்டுகளாக வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாந்தா பகுதியில் ராஜ்குமார் சுக்லாவுக்குச் சொந்தமான மாவு மில்லை தினமும் காலையில் கூட்டிப்பெருக்கும் வேலை செய்துவந்தார் 40 வயது பெண். செவ்வாயன்று தாய் திரும்பி வராததால், 20 வயது மகள், தாயைத் தேடி மாவு மில்லுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, தாயின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்த அறையை எட்டிப்பார்த்தபோது, அங்கே தாயின் உடல்கள் மூன்று துண்டுகளாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார்.

தனது தாய்க்கு நேர்ந்த நிலை குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ராஜ்குமார் சுக்லா மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருமே தலைமறைவாகிவிட்டனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில், காவல்துறையின் மெத்தனம் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமரிசித்துள்ளார்.

மேலும், பாந்தாவில் தலித் பெண்ணுக்கு நேர்ந்த துயரச் சம்பவம் கடும் வேதனை அளிப்பதாகவும், உத்தரப்பிரதேச பெண்கள் அனைவரும் மாநில அரசு மீது அதிருப்தியில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.