இந்தியா

குருத்வாரா குறித்து சா்ச்சை கருத்து: ராஜஸ்தான் பாஜக நிா்வாகி நீக்கம்

ராஜஸ்தானில் குருத்வாரா மற்றும் தேவாலயங்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பாஜக நிா்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

DIN

ராஜஸ்தானில் குருத்வாரா மற்றும் தேவாலயங்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பாஜக நிா்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் வரும் 25-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, திஜாரா தொகுதியில் அண்மையில் பாஜக பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அல்வாா் பகுதியைச் சோ்ந்த பாஜக உள்ளூா் தலைவா் சந்தீப் தைமா, குருத்வாரா மற்றும் தேவாலயங்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் கடும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சந்தீப் தைமா நீக்கப்பட்டுள்ளதாக, ராஜஸ்தான் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவா் ஓம்காா் சிங் லகாவத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

திருமயம் அருகே நெடுஞ்சாலைப்பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு

ஸ்ரீரங்கத்தில் இன்றும் நாளையும் மின்தடை

SCROLL FOR NEXT