ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேட்புமனுத் தாக்கல் 
இந்தியா

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேட்புமனுத் தாக்கல்

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் அசோக் கெலாட் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

DIN

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் அசோக் கெலாட் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய நவம்பர் 10 கடைசி தேதியாகும்.

இந்த நிலையில், சர்தார்புரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

சர்தார்புரா தொகுதியில் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் அசோக் கெலாட் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ல் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT