பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
பெண்களின் கல்வியையும் மக்கள்தொகை கட்டுப்பாட்டையும் இணைத்து அவர் சட்ட பேரவையில் பேசியது சர்ச்சையானது.
“நான் பேசியது உங்களைக் காயப்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்” என பகிரங்க மன்னிப்பு கேட்ட போதும் அவரைப் பதவி விலக எதிர்க் கட்சிகள் கண்டித்து வருகின்றன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் பேசும்போது, “இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பெருமைமிகு கூட்டணியின் தலைவருமானவர், அநாகரிகமான வார்த்தைகளில் பெண்கள் குறித்து சட்ட பேரவையில் நேற்று பேசியுள்ளார். இது குறித்து அவர்கள் யரும் வெட்கப்படவில்லை. இண்டியா கூட்டணி தலைவர்கள் யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பெண்கள் விஷயத்தில் இப்படி நடந்து கொள்பவர்கள், ஏதாவது உங்களுக்கு நல்லது செய்வார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? அவர்கள் என்றைக்காவது பெண்களை மதித்திருக்கிறார்களா? உலகத்தின் முன் இந்தியாவைத் தலைகுனிய வைக்கிறீர்கள். தாய்மார்கள் மற்றும் தங்கைகளுக்காக, உங்கள் தன்மானத்திற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்” எனப் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: அமைச்சருக்கு காலணி மாட்டிவிடும் பாதுகாவலர்: வைரலாகும் விடியோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.