21 வயதான ஹிமான்ஸு என்பவர் தில்லி வெல்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (நவ.10) பிற்பகல் 2.10 மணிக்கு விபத்து குறித்து காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
வீட்டில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் காயமடந்ததாகக் கிடைத்த தகவலையொட்டி அங்கு விரைந்துள்ளனர் தில்லி காவலர்கள்.
ஹிமான்ஸு வீட்டில் பட்டாசுக்கான மருந்து கலவையை உருவாக்க சல்பர் மற்றும் பொட்டாசியம் மருந்துகளை கலந்த போது இந்த வெடி விபத்து நடந்துள்ளது.
அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹிமான்ஸு இரவு 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இதையும் படிக்க: பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
இது குறித்து காவலர்கள் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.