ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9-ஆக பதிவாகியுள்ளது.
இன்று (நவம்.16) காலை 9.34 மணிக்கு தோடா மாவட்டத்தில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க: பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கடன் வசூல் முகவர்கள் இருவர் கைது
முன்னதாக, புதன்கிழமை இதே மாவட்டத்தில் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பயணிகள் பலியான நிலையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.