கோப்புப் படம் 
இந்தியா

வாக்குவாதம் முற்றியதால் காதலியைக் கொலை செய்த இளைஞர் கைது!

இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றியதால் இந்தக் கொலை நடந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

DIN

கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் 23 வயது இளைஞர், அவரது காதலியைக் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேஜஸ் என்கிற பெயர் கொண்ட இவர், பெண் ஒருவருடன் ஆறு மாதக்காலமாக காதலில் இருந்துள்ளார். அந்தப் பெண் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.

கொலையான மாணவி படித்த அதே கல்லூரியில்தான் அந்த இளைஞரும் முன்பு படித்து கல்லூரியை நிறைவு செய்துள்ளார். 

அந்தப் பெண்ணுக்கு முன்பிருந்த காதல் குறித்து தேஜஸுக்குத் தெரிய வரவே தொடர்ச்சியாக இருவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. இந்த வாக்குவாதமே தேஜஸ் மாணவியைக் கொலை செய்ய காரணம் என ஹாசன் மாவட்ட காவல்துறை தெரிவிக்கிறது.

சம்பவம் நடந்த அன்று கல்லூரி மாணவியை அருகில் உள்ள நகரத்துக்கு வரச் சொல்லி அங்கிருந்து 13 கிமீ தூரத்தில் உள்ள மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார், தேஜஸ்.

அங்கு அவர்களிடையே வாக்குவாதம் முற்றியதால் தன் கையில் இருந்த கத்தியைக் கொண்டு மாணவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். மாணவி நிலைகுலைந்து விழவே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் மாணவியை மருத்துவமனையில் சேர்க்க, சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார்.

இந்த நிலையில் தேஜஸ் மீது ஐபிசி பிரிவு 302-ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது காவல்துறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT