இந்தியா

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!

நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

DIN

நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, கடந்த 1998-ஆம் ஆண்டு முதல்முறையாக பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாஜக மகளிர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறிய விஜயசாந்தி, 2020-ஆம் ஆண்டு மீண்டும் தாய் கட்சியான பாஜகவில் இணைந்தார்.

இதனிடையே, தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விஜயசாந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், அவர் பாஜகவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன. 

அதன்படி, நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். 

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் நவ.30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்கம்!

அவளின் அழுகை ஒரு புயலைப் பற்றவைக்கும்: தனது புதிய படம் குறித்து நிவின் பாலி!

அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!

நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி! மாற்றமின்றி நிறைவடைந்த பங்குச் சந்தை!

கவலைகளைப் போக்கும் மாரியம்மன்

SCROLL FOR NEXT