முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர், ம.பி. தேர்தல்: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

பிற்பகல் 3 மணி நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் 60.52% வாக்குகளும், சத்தீஸ்கர் மாநில இரண்டாம் கட்டத் தேர்தலில் 55.31% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:22 AM
மத்தியப் பிரதேசத்தில்...
பகிர்:

பிற்பகல் 3 மணி நிலவரப்படி மத்தியப் பிரதேசத்தில் 60.52% வாக்குகளும், சத்தீஸ்கர் மாநில இரண்டாம் கட்டத் தேர்தலில் 55.31% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த நவ. 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று(நவ. 17) காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதேபோல, மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று தோ்தல் நடைபெற்று வருகிறது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி  இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சத்தீஸ்கர் மாநில இரண்டாம் கட்டத் தேர்தலில் 55.31 சதவீத வாக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 60.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ஐந்து மாநிலத் தேர்தலில் மிசோரம் மாநிலத்திற்கு கடந்த நவ. 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், ராஜஸ்தானுக்கு நவ. 25 ஆம் தேதியும் தெலங்கானாவுக்கு நவ. 30 ஆம் தேதியிலும் தேர்தல் நடைபெற உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →