கோப்புப் படம் 
இந்தியா

சிம்லா- அமிர்தசரஸ் இடையே விமான சேவை தொடக்கம்

சிம்லா மற்றும் அமிர்தசரஸ் இடையே தினசரி விமான சேவையை சிம்லா எம்.பி.யும், ஹிமாசல பிரதேசத்தின் முன்னாள் பாஜக தலைவருமான சுரேஷ் காஷ்யப் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

DIN

சிம்லா மற்றும் அமிர்தசரஸ் இடையே தினசரி விமான சேவையை சிம்லா எம்.பி.யும், ஹிமாசல பிரதேசத்தின் முன்னாள் பாஜக தலைவருமான சுரேஷ் காஷ்யப் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் சிம்லாவில் கூறியதாவது, இந்தச் சேவை சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதோடு, மாநிலத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும். மாநில தலைநகரின் புறநகர் பகுதியில் உள்ள ஜுப்பல் ஹட்டி விமான நிலையமும் விரைவில் விரிவுபடுத்தப்படும். 

ஏர்லைன்ஸ் டைனமிக் கட்டணத்தின் படி, சில இருக்கைகளுக்கு விமான நிறுவனங்கள் நல்ல கட்டணத்தை வழங்குகின்றன, ஆனால் கடைசி இருக்கைகள் விலை உயர்ந்தவை, இது தொடர்பாக எங்கள் ஆலோசனைகளையும் மத்திய அரசிற்கு அனுப்புவோம். 

மேலும் இந்த டிக்கெட்டுகளின் விலையை எப்படி குறைக்கலாம் என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

காலாண்டு விடுமுறை நிறைவு: பள்ளிகள் திறப்பு

திசை தெரியாமல் பயணிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம்!

மேற்கு வங்கத்தில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு! பலர் மாயம்

மேட்டூர் அணை நிலவரம்

SCROLL FOR NEXT