கோப்புப்படம் 
இந்தியா

மும்பை: கைவிடப்பட்ட சூட்கேசில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

மத்திய மும்பையில் கைவிடப்பட்ட சூட்கேசில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

மத்திய மும்பையில் கைவிடப்பட்ட சூட்கேசில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம், மத்திய மும்பையில் உள்ள குர்லாவில் சூட்கேஸ் ஒன்று கைவிடப்பட்டிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்த காவல்துறையினர் சூட்கேஸை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அப்போது அதில், பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் சடலத்தை உடற்கூராய்வுக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பெண், யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் பெண்ணின் சடலத்தைப் பார்க்கும்போது, ​​அவரது வயது 25-35 வயதிற்குள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த பெண் டி-சர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்திருந்தார் என்று காவல்துறைனிர் தெரிவித்தனர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொலையாளியைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT