கோப்புப்படம் 
இந்தியா

நவ. 23ல் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் நாளை மறுநாள் (நவ. 23) நடைபெற உள்ளது. 

DIN

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் நாளை மறுநாள் (நவ. 23) நடைபெற உள்ளது. 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை காவிரி ஒழுங்காற்றுக் குழு, ஆணையத்துக்கு பரிந்துரைத்து வருகிறது. 

முன்னதாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 27 ஆவது கூட்டம் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில், நவம்பர் 1 முதல் 23 ஆம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டது. 

இதையடுத்து  காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் மற்றும் காவிரி ஆணைய உத்தரவுகளை மாநில அரசுகள் செயல்படுத்துகிறதா என்பதைக் கண்காணிக்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் அடுத்த கூட்டம் நாளை மறுநாள் (நவ. 23) நடைபெற உள்ளது. 

இதில், ஆணையம் உத்தரவிட்டபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதா? அடுத்த மாதத்திற்கு எவ்வளவு நீர் திறக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை குறித்து குழு ஆலோசனை நடத்தும். 

இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT