சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு
சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் அருகே இன்று (நவம்பர் 22) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் அருகே இன்று (நவம்பர் 22) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை பிற்பகல் 1.16 மணியளவில் சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் எனப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க: விசாகப்பட்டினத்தில் லாரி மோதி 8 குழந்தைகள் படுகாயம்
Advertisement
இதனால் கேங்டாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.