ஜம்மு - காஷ்மீரின் ரஜௌரியில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு
ரஜௌரி: ஜம்மு - காஷ்மீரின் ரஜௌரியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.
ரஜௌரி: ஜம்மு - காஷ்மீரின் ரஜௌரியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தின் கலகோட் தாலுகாவின் பாஜி மால் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், இருவர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
மேலும், அந்த பகுதிக்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது.