இந்தியா

தெலங்கானாவில் தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ள கார்கே, பிரியங்கா!

ராஜஸ்தானில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த கார்கே, பிரியங்கா தற்போது தெலங்கானாவில் தனது அரசியல் பிரசாரத்தைத் தொடக்கியுள்ளனர். 

DIN

ராஜஸ்தானில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த கார்கே, பிரியங்கா தற்போது தெலங்கானாவில் தனது அரசியல் பிரசாரத்தைத் தொடக்கியுள்ளனர். 

காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா ஆகியோர் தெலங்கானாவில் நவம்பர் 30ல் நான்கு பொதுக்கூட்டக்ஙளில் உரையாற்ற உள்ளனர். 

தென் மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள எல்பி நகர் சட்டமன்றத் தொகுதியில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கார்கே உரையாற்றுகிறார். 

தெலங்கானா பாலகுர்த்தி பகுதியில் காலை 11.30 மணிக்கு பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார். அதைத்தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு மற்றொரு கூட்டத்தில் பிரியங்கா உரை நிகழ்த்துகிறார். பின்னர் 2.30 மணிக்கு கொத்தகுடம் பகுதியில் மூன்றாவது பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். 

பிரசாரம் முடிவடைய இன்னும் ஐந்து நாள்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 
 
கார்கே, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் தென் மாநிலத்தில் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து கட்சிக்காகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

மாநில மக்களுக்கு பல வாக்குறுதிகளை அறிவித்து, 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவையில் பிஆர்எஸ் கட்சியை அப்புறப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT