இந்தியா

‘ஆயுஷ்மான் அட்டை இல்லையென்றாலும் அரசே மருத்துவ செலவை ஏற்கும்’: உ.பி. முதல்வர்!

DIN

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆயுஷ்மான் ஆரோக்கிய அட்டைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யவும் எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்தப் பயனர் அட்டைகள் கட்டணமில்ல சிகிச்சை கிடைக்க வழிவகை செய்கிறது.

இன்று (சனிக்கிழமை) கோரக்பூரில் நடந்த மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட மக்களின் குறைகளைக் கேட்டறிந்த ஆதித்யநாத், தகுந்த நேரத்தில் தரமான மற்றும் நிறைவான சேவையை மக்களுக்கு அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

மேலும்,  “மருத்துவ உதவி தேவைப்படும் அனைவருக்கும் முழுமையான வசதி முதல்வரின் நிதியில் இருந்து வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆயுஷ்மான் அட்டை இல்லாதவர்களின் சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவசர கால அடிப்படையில் ஆயுஷ்மான் அட்டை வழங்கவும் தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் அலட்சியம் காட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத் தரவரிசை: 168 ஆவது இடத்தில் கேஐஐடி பல்கலைக்கழகம்

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

ராயன் - பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா!

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT