ம.பி.: மின்சாரம் தாக்கி புலி உயிரிழப்பு!
மின்வேலியை அணுக முயன்ற போது புலி மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய பிரதேசம் ஷதோல் மாவட்டத்தில் 12 வயதான புலி ஒன்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பந்தவ்கார் தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள ஜெய்த்பூர் வனப் பகுதிக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக 11 கிராமத்தவர்களை வனத்துறை கைது செய்துள்ளது.
15 நாள்களுக்கு முன்பே இறந்த புலியின் சடலத்தை வனக் காவலர்கள் ரோந்தின்போது கண்டறிந்துள்ளனர். வன உயிரிகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அந்தக் கிராமத்தவர்களைக் கைது செய்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியைப் புலி அணுகியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்காலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு?
மத்திய பிரதேசத்தில் 2022-ல் நடந்த கணக்கெடுப்பின் அறிக்கையின்படி புலிகளின் எண்ணிக்கை 785 ஆக இருந்தது. பாதுகாப்பட வேண்டிய நிலையில் உள்ள புலிகள் தொடர்ந்து பலியாகும் நிகழ்வு வன உயிரினச் சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.