முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.0 ஆகப் பதிவு

அஸ்ஸாம் மாநிலத்தின் தரங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:25 AM
பகிர்:

அஸ்ஸாம் மாநிலத்தின் தரங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அஸ்ஸாமின் தரங் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.36 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 22 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

இதனால் அஸ்ஸாமின் தரங் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ அல்லது உயிர்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் கடந்த 8-ஆம் தேதி 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் அதே மாதத்தில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.