முகப்பு
இந்தியா

ஒடிசா : நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல், இரண்டு பேர் படுகாயம்!

ஒடிசா மாநிலத்தில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Updated On : 26 நவம்பர், 2023 at 1:23 PM
கோப்புப்படம்
பகிர்:

ஒடிசா மாநிலம், ஹரிப்பூர் கிராமத்தில் இரண்டு பேர் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். 

தங்கள் வீட்டு வாசலில் இருந்த நிரஞ்சன் தாஸ் (27) மற்றும் சீனிவாச தாஸ் (24) ஆகிய இருவர் மீதும் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். விசாரணையில் இரண்டு தரப்பினருக்கு இடையேயான பலநாள் பகையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரண்டு நபர்கள் பிடிக்கப்பட்டு விசாரணை நடத்திவருவதாகக் காவல் கண்காணிப்புப் பொருப்பாளர் ஜெகநாத் மாலிக் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தத் தேடுதல் பணியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கிராமப்பகுதியில் தொடர் தாக்குதல் சம்பவங்களைத் தவிர்க்க காவலர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.