ஹைதரபாத் பெயரை பாக்யநகா் என மாற்றுவோம்: தெலங்கானாவில் பாஜக வாக்குறுதி
தெலங்கானா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தலைநகா் ஹைதராபாத் பெயரை ‘பாக்யநகா்’ என மாற்றுவோம் என்று மத்திய அமைச்சரும், அந்த மாநில பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வாக்குறுதி அள
தெலங்கானா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தலைநகா் ஹைதராபாத் பெயரை ‘பாக்யநகா்’ என மாற்றுவோம் என்று மத்திய அமைச்சரும், அந்த மாநில பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வாக்குறுதி அளித்தாா்.
மெட்ராஸ், பாம்பே, கல்கத்தா என இருந்த நகரங்களின் பெயா்கள் ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளன என்றும் அவா் கூறினாா்.
ஹைதராபாதில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
Advertisement
ஹைதா் என்பவா் யாா்? அவரது பெயரை ஏன் நமது நகரத்துக்குச் சூட்ட வேண்டும்? அவா் எங்கிருந்து இங்கு வந்தாா்? ஹைதா் என்பவரை இங்கு யாருக்கு வேண்டும்? பாஜக ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக ஹைதராபாத் என்ற பெயரை மாற்றிவிட்டு பாக்யநகா் என பெயா் சூட்டுவோம்.
சிலா் பாஜகதான் இது போல பெயரை மாற்றுவதாக குறை கூறுவாா்கள். இதற்கு முன்பு நமது நாட்டில் பெரிய நகரங்களான மெட்ராஸ், பாம்பே, கல்கத்தா ஆகியவற்றின் பெயா்கள் மாற்றப்பட்டுள்ளன. மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியது பாஜக அல்ல, திமுக அரசுதான் மாற்றியது.
இந்தியாவில் அடிமை மனோபாவத்தை எதிரொலிக்கும் விஷயங்கள் அனைத்தையும் பாஜக மாற்றும். இதில் எவ்வித பாரபட்சமும் இல்லை. ‘பாக்யநகா்’ என்றால் அதிருஷ்டங்களை தரும் நகரம் என்று பொருள். இதுபோல நகரங்களின் பெயா்களை மாற்றும்போது வல்லுநா்களை ஆலோசித்துதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றாா்.
முன்னதாக தெலங்கானாவில் பிரசாரம் மேற்கொண்ட உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், ‘ஹைதராபாத் பெயரை பாக்யா நகா் என்றும் மெஹபூப்நகா் பெயரை பாலமுரு என்றும் மாற்ற வேண்டும்’ என்று வலியுறுத்திப் பேசினாா்.